சினிமால அப்பாவா ஒரு ரவுண்டு வருவேன்’: நாஞ்சில் சம்பத் நம்பிக்கை

சினிமால அப்பாவா ஒரு ரவுண்டு வருவேன்’: நாஞ்சில் சம்பத் நம்பிக்கை
Updated on
1 min read

’இனி, கொஞ்சகாலத்துக்கு சினிமால அப்பாவா ரவுண்டு வருவேன் என்று எல்லோருமே சொல்றாங்க' என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘எல்.கே.ஜி’ திரைப்படம் இன்று (22.219) ரிலீசாகி உள்ளது. கே.ஆர்.பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

இதுவரை அரசியலில் ஈடுபட்டு வந்த நாஞ்சில் சம்பத், இந்தப் படத்தில் தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது நாஞ்சில் சம்பத் நடித்துள்ள முதல் படம்.

இதுகுறித்து, தனியார் இணையதள சேனலில் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாவது:

சினிமாவில் நடிக்கவேண்டும், நானும் சினிமாவில் நடிப்பேன் என்றெல்லாம்  ஆசைப்பட்டதே இல்லை. திட்டமிட்டதே கிடையாது. ஆனால் காலம் நம்மைக் கைவிடாது என்பார்கள். அப்படித்தான் சினிமா வாய்ப்பைப் பார்க்கிறேன்.

பேச்சைக் கொண்டு சம்பாதித்தவன் நான். பேசினால்தான் காசு கிடைக்கும். இப்போது பேசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. எந்தக் கட்சியிலும் நான் இல்லாமல், அரசியலை விட்டு வந்துவிட்டதால் வந்த விளைவு இது. முன்பு செலவழிக்கும் தேவையில்லை. இப்போதுதான் தேவைகள் வந்திருக்கின்றன. ஆனால் செலவழிக்க பணமில்லை.

ஆர்.ஜே.பாலாஜி தான் நடிக்கும் படத்தில் நடிக்கும்படி என்னை வந்து கேட்டார். ‘என் மகனின் காலேஜ் ஃபீஸைக் கட்டுறீங்களா?’ என்று கேட்டேன். ‘தயாரிப்புல எவ்ளோ கேட்டு வாங்கித்தரமுடியுமோ அதை வாங்கித்தரேன்’ என்று உறுதியளித்தார்.

அடுத்து, ‘எனக்கு நடிப்பு வரும்னு நினைக்கிறீங்களா?’ என்று கேட்டேன். முடியும் என்று எல்லோரும் சொன்னார்கள்.

அதன்படிதான் எல்.கே.ஜி. படத்தில் நடித்தேன். படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு இப்போது எல்லோருமே பாராட்டுகிறார்கள். ‘இனி, கொஞ்சகாலத்துக்கு சினிமால நீங்கதான் அப்பா’ என்று பலரும் சொல்லுகிறார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜிக்கும் இயக்குநருக்கும் நன்றி.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in