

நடிகராக வலம் வந்த போஸ்ட் வெங்கட் புதிதாக படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நடித்தவர் போஸ் வெங்கட். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். 'சிவாஜி', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட சில படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் என்பதைத் தாண்டி புதிதாக இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார். ஹஷீர் தயாரிப்பில் ஸ்ரீராம் கார்த்திக், காயத்ரி, 'ஆடுகளம்' முருகதாஸ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை போஸ் வெங்கட் இயக்கவுள்ளார்.
இயக்குநராக அறிமுகமாக உள்ளது குறித்து போஸ் வெங்கட் கூறியிருப்பதாவது:
நீண்ட கால கனவு இப்போது தான் நிறைவேறி உள்ளது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணிபுரியும் போது, திருட்டுத்தனமாக அவர்கள் வேலை செய்யும் பாணியை கவனிப்பேன். அதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு ஊக்கமளித்த என் நண்பர்களுக்கு நன்றி.
இவ்வாறு போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.