அஜித்துடன் பணிபுரிய விரும்பும் பிரபல புகைப்படக் கலைஞர்

அஜித்துடன் பணிபுரிய விரும்பும் பிரபல புகைப்படக் கலைஞர்
Updated on
1 min read

அஜித்துடன் பணிபுரிந்து அவரது நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ள ஆசை என்று பிரபல புகைப்படக் கலைஞர் 'ஸ்டில்ஸ்' ரவி தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல், விஜயகாந்த், இயக்குநர் பாலசந்தர், எழுத்தாளர் சுஜாதா, மோகன், சுஹாசினி உள்ளிட்ட பல நடிகர்களின் ஆரம்பகாலப் புகைப்படங்களை எடுத்தவர் 'ஸ்டில்ஸ்' ரவி. இவருடைய பழைய புகைப்படங்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவ்வப்போது தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பழைய புகைப்படங்களைப் பதிவிடுவார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிப்பில் வெளியான படம் 'ஆரம்பம்'. இதன் படப்பிடிப்பு நடைபெறும் போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அப்போது,  இந்தப் படம் எப்போது எடுத்தீர்கள், அஜித் என்ன சொன்னார் என்று பலரும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

தொடர்ச்சியாக இந்தக் கேள்விகள் துரத்தவே, இதற்கான பதிலை தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் 'ஸ்டில்ஸ்' ரவி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இதன் பின்னால் இருக்கும் கதை இதுதான்.

2013-ல் துபாயில் இருக்கும் என் மகளை பார்க்கச் சென்றேன். அப்போது என் மகள் வீட்டருகில் இருக்கும் ஜபீல் பூங்காவில் அஜித் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது. நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். 

என்னைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு அருகில் வந்து பேசினார். பேசிக்கொண்டிருக்கும்போது "எல்லா நடிகர் நடிகையர் புகைப்படமும் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கிறது. ஆனால் எங்க தல புகைப்படம் மட்டும் இல்லையே என பலர் என்னைக் கேட்கின்றனர்" என்றேன். (இதுவரை நான் அவருடன் இணைந்து பணியாற்றவில்லை). 

அதனால் உங்களை புகைப்படம் எடுக்கவேண்டும் என்றேன். உடனே, மதியம் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். (அப்போது நான் எனது கேமராவைக் கொண்டு செல்லவில்லை) எனது சின்ன எளிமையான கேமராவில் இதை எடுத்தேன். 

(எனக்கு அவருடன் பணியாற்ற விருப்பம் உள்ளது. அவர் புகழ்பெற்ற நாயகன் என்பதால் மட்டுமல்ல. அவருடன் பழகி அவரது நல்ல குணம், உதவும் பண்பு ஆகியவற்றைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள...''.

இவ்வாறு 'ஸ்டில்ஸ்' ரவி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in