மகளின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்

மகளின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்
Updated on
1 min read

செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா.

இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று அழைப்பிதழ் வைத்தார் ரஜினிகாந்த்.

இன்று (பிப்ரவரி 8) செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர் ரஜினிகாந்தும் லதாவும். அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in