

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கேத்ரின் தெரேசா மற்றும் மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுமன், மஹத், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
‘யு’ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்துக்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை, ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. 8 கோடி ரூபாய் கொடுத்து இதனை வாங்கியுள்ளது ஜீ தமிழ்.