ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது ஏன்? - தமன்னா விளக்கம்

ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது ஏன்? - தமன்னா விளக்கம்
Updated on
1 min read

ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக் கொள்வது ஏன் என்று தமன்னா அளித்த பேட்டியொன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் 'தேவி 2' படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோருடன் நடித்துள்ள 'F2' திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது ஏன் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அக்கேள்விக்கு தமன்னா கூறியிருப்பதாவது:

சினிமாவில் எனது ஆரம்ப நாட்களில் எனது நடனத்தால் தான் முக்கியத்துவம் கிடைத்தது. மேலும், நடிகைகளுக்கு, அவர்களது நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே அவர்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நான் மட்டுமே பிரதானமாக இருக்கும் விசேஷமான பாடல்களில், எனது நடனத் திறமையைக் காட்ட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in