

“வாழ்க்கையில் நமக்கு அமைகிற வேலையை சரியா, பொறுப்பா செய்யணும். அப்படித்தான் என் சீரியல் பயணமும். அதனாலதான் ஒரே நேரத்துல ரெண்டு, மூணு சீரியல்னு எடுத்துக்காம ஒண்ணுல மட்டும் கவனம் செலுத்துகிறேன். அதுக்கு இன்னொரு காரணம். நேரம். ஒரு சீரியலில் கவனம் செலுத்தவே நேரம் சரியா இருக்கு. நடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும்போது, இயற்கை பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன்.
கேரளாவில் இருக்கும் என்னோட வீட்டைச் சுற்றியும் பச்சைப் பசேலென்று மாற்றி வைத்துள்ளோம். அந்த அளவுக்கு இயற்கை பிடிக்கும். அந்த வகையில், ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை’ என்ற தமிழக அரசின் சமீபத்திய முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சுது. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என திருச்சியில் சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்தோம். பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இந்த தடைக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து, ‘யாரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம்’னு அவங்களே களத்தில் இறங்கி, கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது” என்கிறார் ஸ்ருதி.