

குட்டி ரேவதி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ‘மெட்ராஸ்’ ஜானி.
பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில், ஜானி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி கிருஷ்ணன். இந்தக் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது. அத்துடன், தனுஷின் ‘வடசென்னை’ மற்றும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்நிலையில், குட்டி ரேவதி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜானி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, மாலா மணியன் தயாரிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘மரியான்’ படத்துக்காக ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ பாடல்களை எழுதி பாடலாசிரியராக சினிமாவில் அறிமுகமானவர் குட்டி ரேவதி.
கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகங்கள் கொண்ட குட்டி ரேவதி, ‘மாயா’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. விரைவில் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.