Published : 04 Jan 2019 08:47 AM
Last Updated : 04 Jan 2019 08:47 AM
விஜய் தொலைக்காட்சி மீண்டும் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் - 2 நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. இது ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. ஆட்டம், பாட்டு, விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ.
நிகழ்ச்சியில் கலந்துகொள்வது முழுக்க பெண் போட்டியாளர்கள் மட்டுமே என்பது இதன் சிறப்பம்சம். அனைத்து எபிஸோடிலும் 2 அணிகளாக கலந்துகொள்வார்கள். ஒரு அணிக்கு 3 பெண்கள். இவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் தரப்படும். முற்றிலும் பொழுதுபோக்கு சுற்றுகள் மட்டுமே இதில் இடம்பெறும். மொத்தம் 4 சுற்றுகள். மூன்றாவது சுற்றின் முடிவில் எந்த அணி அதிக சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளதோ, அவர்கள் 4-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 4-வது சுற்றில், தொகுப்பாளர்கள் ரியோ - ஆண்ட்ரூஸ் அல்லது தோல்வியடைந்த எதிர் அணியுடன் இவர்கள் விளையாடுவார்கள். இந்த இருவர் கூட்டணி ‘சகல ரகள’ நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT