சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'கொம்புவச்ச சிங்கம்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதன்பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய இரு படங்களை இயக்கினார். இப்படங்கள் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில் எஸ்.ஆர்.பிரபாகரன், மீண்டும் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருகிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமானுஜம், இந்தர் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

‘குற்றம் 23’ மற்றும் ‘தடம்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள இந்தர் குமார், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in