

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கியுள்ள தொடர்கள் பட்டியலில், வித்தியாசமான கதைக்கள பின்னணியில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது ‘சிவா மனசுல சக்தி’.
இத்தொடரில் சிவா - சக்தி என்னும் இரு மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்திக்கிறார்கள்? அதனால் அவர்களது பயணம் எப்படி மாறுகிறது என்பதாக கதை நகர்கிறது. அதீத கடவுள் நம்பிக்கை உடையவர் சிவா. விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பதுதான் மகிழ்ச்சிக்கான வழி என்று நம்புபவர். மறுபுறம் சக்தி அன்பும் காதலும் பெரிதாக பெறாத ஒருவர். மனம் சொன்னபோக்கில் நடப்பதே மகிழ்ச்சிக்கான வழி என்று நம்புபவர்.
இப்படி மாறுபட்ட கோணங்களைக் கொண்ட சிவாவும், சக்தியும் சந்தித்து தங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவார்களா? இத்தொடரில் சிவாவாக தொலைக்காட்சி நடிகர் விக்ரம் நடிக்கிறார். இவர் கன்னடத் திரைப்படங்களில் சில வேடங்களில் நடித்துள்ளார்.
சக்தியாக தனுஜா நடிக்கிறார். இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மிக பிரபலமானவர். இந்த இரு நட்சத்திரங்களும் தமிழில் இந்த தொடர் மூலம் அறிமுகமாகின்றனர்.