வைரலான விஷாலின் மணப்பெண் புகைப்படம்? விஷால் தரப்பு மறுப்பு

வைரலான விஷாலின் மணப்பெண் புகைப்படம்? விஷால் தரப்பு மறுப்பு
Updated on
1 min read

மீண்டும் வைரலான விஷாலின் திருமணச் செய்தி தொடர்பாக, அவரது தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவுக்கும் திருமணம் செய்து வைக்க  விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது திருமணம் குறித்து இத்தகைய தவறான செய்திகள் எப்படி பிரசுரமாகின்றன என வியக்கிறேன். தவறைத் திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், விஷால் திருமணம் செய்யவுள்ள அனிஷா இவர் தான் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து விஷால் மனைவி இவர் தான் என்று பலரும் செய்திகள் வெளியிடவே, சமூக வலைதளத்தில் அப்பெண்ணின் புகைப்படம் ட்ரெண்ட் ஆனது.

மீண்டும் விஷால் திருமணச் செய்தி ஆரம்பமானது தொடர்பாக அவரது தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன்  விஷாலின் மணமகள் என்று வெளிவந்து  பரவிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.  முறைப்படி அறிவிப்பு  வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in