வில்லனாக பாரதிராஜா நடிக்கும் ‘ராக்கி’

வில்லனாக பாரதிராஜா நடிக்கும் ‘ராக்கி’
Updated on
1 min read

‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. இந்தப் படத்தின் பிரதான பாத்திரத்தில் ஆண்ட்ரியாவும், முக்கியக் கதாபாத்திரத்தில் அஞ்சலியும் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா நடித்த இந்தப் படம், 2017-ம் ஆண்டு ரிலீஸானது.

‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் ‘ராக்கி’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறா. அதுவும் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். ‘பாண்டிய நாடு’ படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், , ‘குரங்கு பொம்மை’ படத்தில் வெகுளியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பாரதிராஜா.

அவர் தற்போது வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருப்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in