சி.வி.குமாரின் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சி.வி.குமாரின் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

இடையே மீண்டும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கத் தொடங்கினார். சத்தமின்றி மொத்த படத்தையும் முடித்துவிட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு சி.வி.குமாருடைய நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நாயகியை முன்னிலைப்படுத்திய இப்படத்தில், பிரதான வேடத்தில் பிரயங்கா ருத் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகும் படம் இது. வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ஹரி டவுசியா இசையமைத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in