ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலியா? - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலியா? - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்
Updated on
1 min read

ரஜினி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு 'நாற்காலி' இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

இப்படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனிடையே இப்படத்தின் தலைப்பு 'நாற்காலி' என்று செய்திகள் வெளியாகின. பலரும் இந்தத் தலைப்பை வைத்து செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

தற்போது இந்தத் தலைப்பு விவகாரம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ என் அடுத்த படத்தின் தலைப்பு 'நாற்காலி' அல்ல. தவறான வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in