உங்களை இழந்துவிட்டோம் ஐயா: கருணாநிதிக்கு விக்ரம் பிரபு புகழாஞ்சலி

உங்களை இழந்துவிட்டோம் ஐயா: கருணாநிதிக்கு விக்ரம் பிரபு புகழாஞ்சலி
Updated on
1 min read

உங்களை இழந்துவிட்டோம் ஐயா என்று கருணாநிதிக்கு விக்ரம் பிரபு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “தாத்தாவின் முதல் நண்பர்களில் ஒருவர். தாத்தாவின் திருமணத்தில் மணமகனின் தோழன். சிவாஜி என்ற பெயர் துறைக்கு வருவதற்கு முன்பிலிருந்தே குடும்பத்தில் ஒருவர். அன்னை இல்லத்தின் நல விரும்பி. உங்களை இழந்துவிட்டோம் ஐயா” என்று தெரிவித்திருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in