வில்லன் நான் தான்: பேட்ட தொடங்கும் முன்பே அச்சாரம் போட்ட விஜய்சேதுபதி

வில்லன் நான் தான்: பேட்ட தொடங்கும் முன்பே அச்சாரம் போட்ட விஜய்சேதுபதி
Updated on
1 min read

'பேட்ட' படத்தின் பணிகள் தொடங்கும் முன்பே, வில்லனாக நான் தான் நடிப்பேன் என்று கேட்டு வாங்கியுள்ளார் விஜய்சேதுபதி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்தக்கி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இருவரின் நடிப்புக்குமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. ரஜினியுடன் படம் பண்ண கார்த்திக் சுப்பராஜ் முயற்சி பண்ணிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போதே, விஜய் சேதுபதி தொலைபேசி வாயிலாக, "கண்டிப்பாக நீங்க ரஜினி சார் படம் பண்ணுவீங்க.  அப்போ எனக்கு வில்லன் ரோல் கொடுங்க" என்று முதலிலே முன்பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு விஜய்சேதுபதி தன்னிடம் கூறியதை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள பேட்டியிலும் உறுதி செய்துள்ளார்.

'பேட்ட' திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வசூல் செய்து வருவதால், பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in