பேட்ட வசூல்: அமெரிக்காவில் தொடரும் ரஜினியின் சாதனை

பேட்ட வசூல்: அமெரிக்காவில் தொடரும் ரஜினியின் சாதனை
Updated on
1 min read

அமெரிக்காவில் தொடர்ச்சியாக தன் படங்களின் மூலம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறார் ரஜினி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தக், சசிகுமார் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் அமெரிக்காவில் 'எந்திரன்' படத்தின் வசூலை நெருங்கியுள்ளது. இன்றைய வசூல் நிலவரம் வெளியாகும் கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் வசூலை நிச்சயமாக தாண்டிவிடும். அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களில் ரஜினி படங்களே உள்ளன.

அமெரிக்காவில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் வசூல் நிலவரம்:

2.0 - 5.5 மில்லியன் டாலர்கள்

கபாலி  - 4.58 மில்லியன் டாலர்கள்

எந்திரன் - 2.02 மில்லியன் டாலர்கள்

பேட்ட - 2.00 மில்லியன் டாலர்கள்

காலா - 1.9 மில்லியன் டாலர்கள்

மெர்சல் - 1.83 மில்லியன் டாலர்கள்

24 - 1.63 மில்லியன் டாலர்கள்

லிங்கா - 1.52 மில்லியன் டாலர்கள்

- 1.24 மில்லியன் டாலர்கள்

தெறி - 1.12 மில்லியன் டாலர்கள்

விஸ்வரூபம்  - 1.06 மில்லியன் டாலர்கள்

சர்கார் - 1.01 மில்லியன் டாலர்கள்

தமிழத்தின் வசூல் நிலவரத்தில் கடும் போட்டி நிலவி வரும் வேளையில், சத்தமின்றி அமெரிக்காவில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது 'பேட்ட'. அங்கு வரும் மொத்த வசூல் கண்டிப்பாக 4 மில்லியன் டாலர்கள் வரை செல்லலாம் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in