எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் இளையராஜா பேச்சு 

எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் இளையராஜா பேச்சு 
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளைய ராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நுண்கலைப் புலம் சார்பில் நேற்று கொண்டாடப் பட்டது.

பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா கலந்து கொண்டார். அரங்கின் மத்தியில் சென்று மாணவ, மாணவிகளுடன் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்டினார்.

பின்னர் பேசிய இளையராஜா, ‘‘இந்த அரங்குக்கு நான் இரண்டா வது முறையாக இப்போது வந்துள் ளேன். 1994-ல் எனக்கு இந்த அரங் கில் டாக்டர் பட்டம் வழங்கப்பட் டது. அதன்பிறகு இந்த விழா வுக்கு வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கின் றன. நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்கு வப்பட்ட இதய குரலிலிருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டு கிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர்'' என்றார்.

தொடர்ந்து மாணவர்கள் கேட் கும் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய இளையராஜா, "அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அதேபோல் மாணவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நீரோடைகள் செல்லும் இடங்களைப் பசுமையாக்குவது போல, மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களெல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது. நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது.

அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்'' என்று கூறி, தன் முன் இருந்த ஹார்மோனிய பெட்டி மீது சத்தியம் செய்து இதை கூறுவதாக கூறினார்.

துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், "பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப் போகிறோம். பல்கலைக் கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தை இருக்கை அமைக்க அனுமதிக்க வேண்டும். இந்த இருக்கையின் மூலம் இசைத் துறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்க திட்ட மிட்டிருக்கிறோம்'' என்றார்.

இதனை இளையராஜா ஏற்றுக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தருவதாக கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in