

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளும் காமெடி பட்டாளங்கள் பலரும் தற்போது நடுவர்களாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில், வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியை, சின்னத்திரை காமெடி புகழ் வெங்கடேஷ், கிறிஸ்டோஃபர், சரவெடி சரவணன் ஆகியோர் நடுவர்களாக வழங்கி வருகின்றனர்.
பல்வேறு கலைஞர்களிடம் புதைந்துகிடக்கும் திறமைகளை இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வருகிறது. அதிலும் குழு காமெடி, இருநபர் காமெடி, தனிநபர் நகைச்சுவை என மூன்று பிரிவுகளில் வரும் நிகழ்ச்சியாக இது வரவேற்பை பெற்று வருகிறது.