Published : 25 Jan 2019 12:53 PM
Last Updated : 25 Jan 2019 12:53 PM

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார் காமெடி நடிகரான சூரி.

விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில், திருநங்கை கெட்டப்பில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘சிந்துபாத்’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை இயக்கியுள்ளார் எஸ்.யு.அருண் குமார். இதில், ஹீரோயினாக அஞ்சலி நடித்துள்ளார்.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய்  சேதுபதி. யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். தேனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆட்டோ டிரைவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இதனைத் தொடர்ந்து, ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. விஜயா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். ‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ படங்களைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x