

விஸ்வாசம் திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கு பணம் தர மறுத்த தந்தைக்கு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பீடி தொழிலாளி பாண்டியன் (45). இவரது மகன் அஜித்குமார் (20). விஸ்வாசம் திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கு செல்ல தந்தையிடம் அஜித்குமார் பணம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தந்தையிடம் அஜித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த அஜித்குமார், தந்தையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் ஓடிச் சென்று பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலை, முகம், கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் அஜித்குமாரை விருதம்பட்டு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.