Published : 03 Dec 2018 03:30 PM
Last Updated : 03 Dec 2018 03:30 PM

கஜா புயல் பாதித்த கிராமங்களுக்கு  நடிகர் சசிகுமார் நேரில் சென்று ஆறுதல் 

மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் பாதிப்பில்  இருந்து இன்னும் மீளாத் துயரில் இருக்கின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்டா பகுதியைச் சேர்ந்த  வலசக்காடு, வாடிக்காடு, துறவிக்காடு, திருச்சிற்றம்பலம், புனல்வாசல் உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.

புயல் பாதித்த பகுதிகள் தனக்குள் உண்டாக்கிய வலி குறித்து அவர் கூறியதாவது:

’’வீட்டின் மேற்கூரைகளையும் ஓடுகளையும் இழந்து நிற்கிற ஒவ்வொருவரையும் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. தென்னை மரங்களை இழந்து நிற்கும் பெரும் முதலாளிகளைப் பார்த்து தொழிலாளர்கள் பலரும், ‘அவங்க நல்லா இருந்தாத்தானே எங்களுக்கு வேலை கொடுக்க முடியும்.  எங்க குழந்தைங்க பள்ளிக்குப் போக முடியும். நாங்களும்  நல்லா இருக்க முடியும். இன்னைக்கு அவங்களோட நிலையும் இப்படி ஆகிடுச்சே...’ என்று ஒவ்வொரு தென்னந்தோப்பையும், முறிந்து கிடக்கும் தென்னை மரங்களையும் காட்டி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஓடுகளையும் கூரைகளையும் இழந்து நிற்பவர்களுக்குத்  தார்ப்பாய்களை அளித்தோம். இன்னும் பலருக்கு ஓடுகள் வாங்கிக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறேன். சொந்தக்காரர்களோட துக்க வீட்டுக்குப் போய் நிற்கிற மனநிலையை அந்தப் பகுதிகளைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.”

இவ்வாறு சசிகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x