உலக அளவில் ட்ரெண்டாகும் #PettaTrailer: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக அளவில் ட்ரெண்டாகும் #PettaTrailer: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
Updated on
1 min read

ட்விட்டர் தளத்தில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் 6-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது #PettaTrailer.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 28) வெளியானது. பழைய ரஜினியைக் கொண்டுவந்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பிரபலங்கள் பலரும் 'பேட்ட' ட்ரெய்லரைப் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் ஸ்டைல், வசன உச்சரிப்பு என பலரும் படத்தின் ட்ரெய்லர் குறித்து ட்வீட் செய்ய #PettaTrailer என்ற ஹேஷ்டேக் உலகளவில் 6-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அளவில் #PettaTrailer, #GetRajinified, #PettaPongalParaak, Superstar Rajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. மிகப்பெரும் வரவேற்பால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. ட்ரெய்லர் வெளியான 40 நிமிடங்களுக்குள் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் முக்கியமான தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in