

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது Azerbaijan நாட்டில் பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது.
பாடல்கள் படப்பிடிப்புக்கு இடையே, நாயகி நயன்தாராவிடம் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது, நயன்தாராவை கட்டிப் பிடிப்பது, கன்னத்தைக் குத்துவது என அக்குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரவிக்குமார் இயக்கி வரும் படத்தில் நடித்துக் கொண்டே, 'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.