

ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் இசை வெளியீடு இன்று (டிசம்பர் 9) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 'பேட்ட' படத்தில் முதல்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் த்ரிஷா. அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில், ரஜினிக்கு மனைவியாக த்ரிஷா நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. 'சரோ' என்பது அவரது கதாபாத்திரத்தின் பெயர்.
ஏற்கெனவே 'மரணமாஸ்' மற்றும் ’ஊ ல லா லா’ ஆகிய படங்களை இணையத்தில் வெளியிட்டார்கள். இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
2019--ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முக்கியமான தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.