நான் ஒரு ஃபெமினிஸ்ட்; ஆனால் மீ டூ இயக்கம் ஒரு குப்பை!- செளகார் ஜானகி சர்ச்சைப் பேச்சு

நான் ஒரு ஃபெமினிஸ்ட்; ஆனால் மீ டூ இயக்கம் ஒரு குப்பை!- செளகார் ஜானகி சர்ச்சைப் பேச்சு
Updated on
1 min read

நான் ஒரு ஃபெமினிஸ்ட்; ஆனால் மீடூ ஒரு குப்பை என நடிகை செளகார் ஜானகி கூறியிருக்கிறார்.

2018-ம் ஆண்டு ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சூறாவளியைக் கிளப்பிய மீ டூ இயக்கத்தை குப்பை எனக் கூறியிருக்கிறார் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என பழம்பெரும் நடிகர்களுடன் நடித்த நடிகை செளகார் ஜானகி செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீ டூ இயக்கத்தை சரமாரியாக வசைபாடியிருக்கிறார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது:

''இந்த மீ டூ சர்ச்சை என்னை நிறையவே சங்கடப்பட வைத்தது. இந்தமாதிரி ஒரு கீழ்த்தரமான விளம்பரத்துக்காக என்றைக்கோ நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியது நீ ஒத்துக்கிட்டு ஓகே சொன்னது, அன்னிக்கி நினைச்சது இன்னிக்கு வேற மாதிரியாப் போனது... இதெல்லாம் வெளிய கொண்டுவர தேவையா?! உனக்கு அன்னிக்கு சூட் ஆச்சு  நீ வாயை மூடிக் கொண்டு இருந்த. இன்னிக்கு மீ டூன்னு ஹாலிவுட்ல சொன்னான், பாலிவுட்ல சொன்னான்னு சொல்றது. என்ன கேவலம் இது? அது யாரைப் புண்படுத்துது? உன் குடும்பத்தை புண்படுத்துது. உன் கணவரைப் புண்படுத்துகிறது. இலை மறை காய் மறைவா இருந்தாதான் வாழ்க்கை. இது ரொம்ப தப்புங்க.

இந்த மீ டூ பிசினஸ் வந்த பிறகு டிவி பார்க்கிறதோ, அடிக்கடி பத்திரிகை பார்க்கிறதோ நான் நிறுத்திவிட்டேன். இன்றைக்கு இருக்கும் பெண்கள் என்ன மாதிரியான பெண்கள்? என்ன பிக் டீல் இது. 20 வருடத்துக்கு முன்னால் நடந்ததை சொல்வதால் நீ என்ன லாபம் அடைகிறாய்?

உனக்கென்ன மரியாதை நாளைக்கு? எவனோ பஸ்ஸில் கையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்வதால் என்ன லாபம். இன்னிக்கு என்ன லாபம் உனக்கு. நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது குப்பை''.

இவ்வாறு சௌகார் ஜானகி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in