

இந்த பூமியிலேயே ஸ்டைலான மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக மேலாக உச்ச நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (புதன்கிழமை) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதில், ”இந்த பூமியிலேயே ஸ்டைலான மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியாவிலிருந்து வந்த சூப்பர் ஸ்டார். தலைவர் ரஜினிகாந்த்” என்று தெரிவித்துள்ளார்.