

’2.0’வில் ’3.0’. ரஜினியின் வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகும் என கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினிக்கு இணையான கதாபாத்திரமாக, அக்ஷய்குமாரின் பட்சிராஜன் கதாபாத்திரம் அமைந்திருப்பதாக பாராட்டி வருகிறார்கள். மேலும் 3டி தொழில்நுட்பம், 4டி ஒலி நுட்பம் என உலகளவில் சினிமா தொழில்நுட்பத்துக்கு சவால்விடும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
பெரும் முதலீடாக இருப்பதால், இப்படத்தின் முதல் நாள் வசூல் படக்குழுவினருக்கு திருப்தி தரவில்லை. இதனால் படத்தை மேலும் விளம்பரப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது படக்குழு.
'2.0' படத்தில் '3.0' என்ற பெயரில் குட்டி ரோபோவாக ரஜினி வருவார். இக்காட்சியை தற்போது அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து, “’2.0’வில் ’3.0’வையும் பார்க்கலாம். குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த வார விடுமுறையை கொண்டாடுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார் அக்ஷய் குமார்.
முக்கியமான காட்சியாக இருப்பதால், இதன் மூலம் வார வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.