2018 ட்விட்டர் இந்தியா ட்ரெண்டில் முதலிடத்தில் சர்கார்: டாப் 10-ல் தென்னிந்திய சினிமாக்கள் ஆதிக்கம்

2018 ட்விட்டர் இந்தியா ட்ரெண்டில் முதலிடத்தில் சர்கார்: டாப் 10-ல் தென்னிந்திய சினிமாக்கள் ஆதிக்கம்
Updated on
1 min read

2018-ம் ஆம் ட்விட்டர் இந்தியா ட்ரெண்டில் அஜித்தை முந்தி முதலிடத்தில் இருக்கிறார் விஜய். ஆம், தென்னிந்திய சினிமாக்கள்தான் டாப் 7 இடங்களைப் பிடித்திருக்கிறது. இதில் 'சர்கார்' முதலிடத்திலும் 'விஸ்வாசம்' இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

2018-ம் ஆண்டும் இதோ விடைபெறப் போகிறது. சமூக வலைதளங்களின் பங்கு அரசியல், சினிமா என எல்லாத் துறைகளிலும் பரவிக் கிடக்கிறது. அதன் சாட்சிதான் அரசியல் ஆரம்பமும் சினிமா ப்ரமோஷனும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நடக்கிறது.

ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களைப் பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா. முதலிடம் சர்காருக்கு. அட சர்கார் படத்துக்கு வேறு ஏதும் நினைக்க வேண்டாம். 1.சர்கார் #Sarkar, 2.விஸ்வாசம் #Viswasam, 3.பரத் அனே நேனு #BharatAneNenu,  4.அரவிந்த சமேதா #AravindhaSametha 5.ரங்காஸ்தலம் #Rangasthalam 6.காலா #Kaala என ட்ரெண்ட் நீள்கிறது.

இந்தப் பட்டியலில் #KarnatakaElections, #KeralaFloods, #Aadhaar, #JusticeforAsifa, #DeepVeer, #IPL2018, #WhistlePodu  #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேகுகளும் இடம் பிடித்துள்ளன.

மோஸ்ட் ரீட்வீட்டட் ட்வீட்..

இதே போல் அதிகப்படியாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் ஸ்கிப்பர் சுனில் சேத்ரி வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அரங்கை நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படமே அதிக லைக் செய்யப்பட்ட ட்வீட். சுமார் 2,15,000 பேர் அதை லைக் செய்துள்ளனர்.

அதிகம் பேசப்பட்ட தலைவர்கள்

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக ராகுல் காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.

யுத்திகா பார்கவா, தமிழில்: பாரதி ஆனந்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in