

ரஜினிகாந்த் நடிப்பில்,ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (டிசம்பர் 28) வெளியானது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்த இந்த ட்ரெய்லர் பற்றி சினிமா பிரபலங்களின் ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
குஷ்பூ: மற்ற நடிகர்களிடம் இல்லாத மந்திரம் இந்த ரஜினியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. அவரிடம் நிச்சயமாகவே ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது. சார், அந்த மந்திரத்தின் ரகசியத்தைச் சொல்லுங்களேன்... பேட்ட ட்ரெய்லர் என்னை வசீகரித்துள்ளது. கடைசி சீனில் அவர் நடனமாடிக் கொண்டே நடப்பாரே... அதைப் பார்த்து செத்துவிட்டேன். சூப்பர் ஸ்டார்னா சூப்பர் ஸ்டார்தான்.
ஜீவா: பேட்ட டீமிடம் இருந்து ஒரு மாஸ் ட்ரெய்லர்! ரஜினி ஃபைட் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன். #PettaTrailer
டிடி: அல்டிமேட் இதுதான். பேட்ட ட்ரெய்லர் தெரிச்சிஃபைட். முழுக்க முழுக்க ரஜினிஃபைட்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: முதன்முறையாக எனது பிறந்தநாள் குறித்து மிகுந்த உற்சாகமடைந்துள்ளேன். காரணம், பேட்ட ட்ரெய்லர். வாவ்... ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்.
விக்ரம் பிரபு: வாவ்! சூப்பர் ஸ்டாரின் இந்த மாஸை அனுபவிக்கக் காத்திருக்கிறேன்.
மனோஜ் குமார் மஞ்சு: வயது அவரது அகராதியிலேயே இல்லை போலும். ரஜினிஃபைட் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன். புத்தாண்டில் சூப்பர் ஸ்டார் படத்துக்காகக் காத்திருக்கிறேன். முதல் நாள் முதல் ஷோவில் நானிருப்பேன். மொத்த குழுவுக்கும் நல்வாழ்த்துகள்.
அஞ்சனா: தலைவா... அடி தூள்! ரஜினிஃபைட் ஆவோம்.
கெளதம் மேனன்: இதுதான் ட்ரெய்லர். இன்னும் இதை அப்படியொரு ட்ரெய்லராகப் பார்க்காதவர்கள் இருக்கிறீர்களா? வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ். சீன்களுக்கான முன்னோட்டம். ரஜினிஃபைட் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ரஜினி சாரை அவருடைய அடையாளங்களுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி. ரொம்ப இயல்பாக, ஈஸியாக, ஸ்டைலாக, நயமாக இருக்கிறார்.
சுதீர் பாபு: 90-களின் ரஜினிகாந்த் என்பதே சினிமாவில் ஒரு தனி வகைப்பாடுதான். காதல் கதைகள், ஆக்ஷன், த்ரில்லர் இவற்றையெல்லாம் தாண்டிய அடையாளம் ரஜினிகாந்த். இந்த பழைய லுக் ரஜினியிடம் காதலில் விழுந்துவிட்டேன். பேட்ட ட்ரெய்லர் மரண மாஸ்.
தனுஷ்: ரஜினிஃபைட் ஆகுங்கள்... தலைவரின் வேகம், தடுக்க முடியாத அவரது ஸ்டைல் தொடர்கிறது. அவரது ஆளுமையும், அந்த மந்திரமும் பேட்டயில் இருக்கிறது.
சிவகார்த்திகேயன்: பேட்ட ட்ரெய்லரை கொல மாஸ், மரண மாஸ் எது வேண்டுமானாலும் சொல்லலாம். நமது ரஜினிகாந்த் சாரை இப்படிப் பார்ப்பதில் பெரிய மகிழ்ச்சி. ஒட்டுமொத்தக் குழுவுக்கும் வாழ்த்துகள்.
லாரன்ஸ்: அற்புதம்... அசத்தல்... விவரிக்க வார்த்தைகள் இல்லை. தலைவர் வேற லெவல். கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் நன்றி. பேட்ட ரிலீஸ் நான் உட்பட ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளிதான். குத்து போடுங்க.
ஆர்யா: செம்ம செம்ம செம்ம... தலைவரிடம் இதைவிட பெட்டராக எதுவும் கேட்க முடியாது. இப்படி ஒரு ட்ரீட் கொடுத்ததற்காக நன்றி கார்த்திக் சுப்பராஜ்.
வைபவ்: கடவுளே... இப்படியும் ஒரு வியக்க வைக்கும் மாஸா..? ட்ரெய்லர் பக்கா தலைவா...
பா.இரஞ்சித்: பேட்ட, நிச்சயமாக பக்கா பொழுதுபோக்குப் படம். வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் குழுவினர். சூப்பர் ஸ்டார் வேற லெவல். பேட்டக்காகக் காத்திருக்கிறேன்.
லட்சுமி ராமகிருஷ்ணன்: இப்போதுதான் பேட்ட ட்ரெய்லர் பார்த்தேன். இதுதான் உண்மையான மரண மாஸ். அவ்வளவு அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போல் இருந்தார். சூப்பர் ஸ்டார் இளமையாக இருக்கிறார். வசீகரிக்கிறார். சிம்ரன் ஒரே ஷாட்டில் உங்களை அடித்துக் காலி செய்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜிடம் ஏதோ ஒரு மந்திரம் இருக்கு.
ஜெயம் ரவி: மாஸ் ட்ரெய்லர். பேட்டக்காக மரண வெயிட்டிங். ரஜினி சாரின் பெஸ்ட் இதுதான்.
விக்னேஷ் சிவன்: பேட்ட பராக்... ராக்கிங் ட்ரெய்லர். ரஜினிஃபைட் ஆகுங்கள். பேட்ட குழுவிற்கு சபாஷ். சிறப்பான பணி.
இயக்குநர் திரு: நாங்கள் விரும்பிய தலைவர் இங்குதான் இருக்கிறார்.
சதீஷ்: அடேங்கப்பா... 90-களின் தலைவரை 2018-ல் கொண்டு வந்திருக்கிறீர்கள். பேட்ட மரண மாஸ் தலைவா. நன்றி கார்த்திக் சுப்பராஜ், அனிருத்.
கதிர்: பேட்ட சும்மா அதிருது... வேற லெவல் தலைவர் ரஜினிகாந்த். கார்த்திக் சுப்பராஜ் சார், நீங்கள் எல்லோரையும் ரஜினிஃபைட் ஆக்கிவிட்டீர்கள். இதை இன்னும் பெரிதாக்கியுள்ளீர்கள். இது ஒரு ப்ளாக்பஸ்டராக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.
அறிவழகன்: பேட்ட, தலைவர் ரஜினிகாந்த அந்த கேட்டைத் திறக்கும் காட்சி நம்மைப் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது. ஸ்டைலும் ஆளுமையும் காட்டி, இதுதான் ரஜினி, இது என்னுடைய படம் எனச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ், அனிருத், சன் பிக்சர்ஸ்.