‘சீதக்காதி’ படத்தின் நீளம் குறைப்பு

‘சீதக்காதி’ படத்தின் நீளம் குறைப்பு
Updated on
1 min read

கடந்த வாரம் ரிலீஸான ‘சீதக்காதி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் 25-வது படம் ‘சீதக்காதி’. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 20) ரிலீஸானது. 73 வயதான அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா, இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

அர்ச்சனா, மெளலி, இயக்குநர் மகேந்திரன், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியைச் சுற்றி படத்தின் கதை இருந்தாலும், அவர் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார்.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும், விஜய் சேதுபதி இல்லாமல் பல காட்சிகளைப் பார்ப்பதற்கு போரடிக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

எனவே, படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்த படத்தின் நேரம், 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in