

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் ஓவியா. என்னதான் வறுமை ஆட்கொண்டிருந்தாலும், தன்னுடைய கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டாள். அதேசமயம் அவளுடைய அன்பான குணத்தால், எல்லோராலும் நேசிக்கப்படும் பெண்ணாகத் திகழ்கிறாள்.
ஓவியாவின் சிநேகிதி காயத்ரி. ஆனால், ஓவியாவுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் கொண்டவள். தனக்குப் பிடித்ததை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்வாள். மற்றவர்களையும் தனக்குச் சாதகமாக நடந்துகொள்ள வைப்பதற்கு முயற்சிப்பாள்.
இருப்பதை வைத்து திருப்தி கொள்ளும் ஓவியாவும், எப்போதும் சந்தோஷத்தைத் தேடியலையும் காயத்ரியும் நண்பர்கள். இந்த நண்பர்களின் கதையும், காதலால் அவர்களுக்குள் ஏற்படும் பிளவும்தான் ‘ஓவியா’ சீரியலின் கதைக்களம்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு இந்த சீரியலை கண்டு ரசிக்கலாம்.