

அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்துக்காக ஸ்பெஷல் ட்ரெய்னர் மூலம் உடலமைப்பை மாற்றி வருகிறார் விஜய்
'தளபதி 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு நடிப்பது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்க ஆயுத்தமாகி வருகிறது படக்குழு.
கதைப்படி ட்ரெய்னராக நடிப்பதால், இன்னும் ஃபிட்டாக விஜய் இருக்க வேண்டும் என அட்லீ முடிவு செய்திருக்கிறார். இதற்காக, ஸ்பெஷல் ட்ரெய்னர் ஒருவரை வைத்து விஜய்யின் உடலமைப்பை மாற்றும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.