ரஜினியின் ஸ்டைல் என்னைப் பாதித்துள்ளது: ‘பேட்ட’ வில்லன் நவாஸுதீன் சித்திக்

ரஜினியின் ஸ்டைல் என்னைப் பாதித்துள்ளது: ‘பேட்ட’ வில்லன் நவாஸுதீன் சித்திக்
Updated on
1 min read

‘ரஜினியின் ஸ்டைல் என்னைப் பாதித்துள்ளது’ என ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நவாஸுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

“ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம். நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. நிஜ வாழ்வில் நான் சிக்கலான ஒரு மனிதனாக இருந்தால், என்னால் கேமராவுக்கு முன் எதுவும் செய்ய முடியாது.

ரஜினி சாரின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றியிருப்பவர்கள் கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது. அதை நான் ‘கேங்ஸ் ஆஃப் வாஸ்பூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்திருந்தேன்.

ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான். தான் ஒரு பெரிய நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது” என்றார் நவாஸுதீன் சித்திக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in