

சிலம்பரசன் - வெங்கட் பிரபு இணையும் 'மாநாடு' படத்தின் கதை பிரமாதமாக இருப்பதாக படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். சிலாகித்துப் பதிவிட்டுள்ளார்.
'பார்ட்டி' படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கவுள்ள படம் 'மாநாடு' . 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து படமும் வெளியாகத் தயாராகி வரும் நிலையில், சிம்பு 'மாநாடு' படத்துக்குத் தயாராகி வருகிறார். இது ஒரு அரசியல் சார்ந்த படம் என்று படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்க்கும் போது தெரிந்தது.
எது சரியோ அதற்காக நில்லுங்கள், தனியாக நிற்கவேண்டியிருந்தாலும் என்ற வாசகங்களுடன் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
தற்போது இப்படத்தின் தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ள பிரவீன் கே.எல்., "இப்போதுதான் அட்டகாசமான மாநாடு கதையை வெங்கட் பிரபு சொன்னார். மிக ஆர்வமாக உள்ளேன். தலை இன்னும் சுற்றுக்கொண்டிருக்கிறது சார் !! அற்புதம், பிரமாதம்!!! கிழி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிம்பு ரசிகர்கள் பலரும் இதை உற்சாகமாக ரீட்வீட் செய்து வருகின்றனர். வெங்கட் பிரபு, சிம்பு இருவருமே தீவிர அஜித் ரசிகர்கள் என்பதால், படத்தில் அஜித் சம்பந்தமான காட்சிகள், வசனங்கள் இருக்கலாம் என்ற ஆவலில் அஜித் ரசிகர்களும் 'மாநாடு' படத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.