ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்: ராம்கோபால் வர்மா பாராட்டு

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்: ராம்கோபால் வர்மா பாராட்டு
Updated on
1 min read

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான், ‘பேட்ட’ ட்ரெய்லரில் ரஜினிக்கு 20 வயசு குறைந்த மாதிரி இருப்பதாக பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா பாராட்டி இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பேட்ட’ படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 28) ரிலீஸ் ஆனது. இந்நிலையில், ரஜினிகாந்தைப் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஜினிதான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் ரஜினி 20 வயசு இளமையா, 30 மடங்கு உற்சாகமாகத் தெரிகிறார்" எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனையொட்டி இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் வெளியான நிலையில் ட்விட்டரில் #PettaTrailer #GetRajinified #PettaPongalParak ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

அதேபோல், ட்ரெய்லரில் வரும் "style ah irukena ah, naturally" என்ற வசனமும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. "ஏய், எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டின்னு சென்டிமெண்ட்டு, கின்டிமெண்ட்டு இருந்தா அப்டியே ஓடிப்போயிடு. கொல காண்ட்ல இருக்கேன். மவனே, கொல்லாம உடமாட்டேன்... " என்ற டயலாக்கை சமூக வலைதளங்களில் ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in