

'விஸ்வாசம்' புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. தற்போது டீஸர், ட்ரெய்லர் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது, வெளிநாட்டு வெளியீட்டில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளது 'விஸ்வாசம்'.
முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளது. இவ்விரண்டு நாடுகளில் வெளியாகும் முதல் அஜித் படமாகவும், இந்த நாடுகளில் வெளியாகும் 4-வது தமிழ்ப் படமாகவும் 'விஸ்வாசம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'விஸ்வாசம்' படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். இமான் தயாரித்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.