

குழந்தை நட்சத்திரமாக சிலபல படங்களில் நடித்தாலும், விஜய் ஹீரோவாக அறிமுகமான படம் ‘நாளைய தீர்ப்பு’. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்தப் படத்தை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தயாரித்தார். ஆக்ஷன் படமாக இது வெளியானது.
விஜய்யுடன் இணைந்து கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா, ராதாரவி, வினு சக்ரவர்த்தி, சரத்பாபு, தாமு, எஸ்.எஸ்.சந்திரன், மன்சூர் அலிகான், கே.ஆர்.விஜயா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்தனர். மணிமேகலை இசையமைத்தார்.
1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. 26 வருடங்கள் முடிந்து இன்றுடன் 27-வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த 26 ஆண்டுகளில், 62 படங்களில் நடித்துவிட்டார் விஜய். தற்போது 63-வது படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அட்லீ இயக்கவுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.