Published : 27 Dec 2018 15:26 pm

Updated : : 27 Dec 2018 15:26 pm

 

ஜெ. பயோபிக்: சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை

விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா பயோபிக்கில், சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இதிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. பாரதிராஜா, விஜய், லிங்குசாமி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தங்களுடைய பார்வையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்க ஆயுத்தமாகி வருகிறார்கள்.

இதில் இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும், பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெ. பயோபிக்கில், வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான  முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் விஜய்.

முன்பாக விஜய் இயக்கத்தில் உருவான 'கரு' படத்தின் மூலமாக தான் சாய் பல்லவி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான 'மாரி 2' படத்தில் சாய் பல்லவியின் நடிப்புக்கு வரவேற்புகள் குவிந்த வண்ணமுள்ளன.

ஆனால் சாய் பல்லவி நடிப்பது குறித்து யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தெலுங்கில் உள்ள முன்னணி இணையதளங்கள் பலவும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய்.

படமாக உருவாகுவது மட்டுமன்றி, இயக்குநர் கெளதம் மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெப்சீரிஸ் ஒன்றை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யாகிருஷ்ண ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறுசாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தைசசிகலாவாக சாய் பல்லவிஜெ. பயோபிக் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவிசசிகலா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

Popular Articles

You May Like

More From This Category

More From this Author