த்ரில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் தணிகை

த்ரில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் தணிகை
Updated on
1 min read

கலைஞர் தொலைக்காட்சியில் விஜே.வாகப் பணிபுரியும் தணிகை, த்ரில்லர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கலைஞர் மற்றும் இசையருவி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுபவர் தணிகை. ஏராளமான சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுத்துள்ள இவரின் முகம், பெரும்பாலானவர்களுக்குப் பரிச்சயமானதும் கூட.

அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் வெளியான ‘குற்றம் 23’ படத்தில் நடித்த இவர், தற்போது ‘தொடுப்பி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தினார் விஜய் சேதுபதி.

தேஸ்வின் பிரேம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அன்சர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சோல் ஆஃப் சவுத்’ (soul of south) என்ற இசைக்குழு, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளது. மெடிக்கல் க்ரைமை அடிப்படையாகக் கொண்டு த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, கொச்சி ஆகிய இடங்களில் 60 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் படத்தின் டீஸர் ரிலீஸாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in