ரஜினி நடிப்பைப் பாத்து ஆண்டவனே வந்து கை தட்டுவான்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

ரஜினி நடிப்பைப் பாத்து ஆண்டவனே வந்து கை தட்டுவான்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Updated on
1 min read

என்னைப் பொறுத்தவரை, அந்த ஆண்டவனே ரஜினி சாரோட டெடிகேஷனைப் பாத்து வந்து, ரசிச்சு கை தட்டிட்டுப் போவான் என்று விஜய் சேதுபதி பேசினார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'பேட்ட'  படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழு பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று (9-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:

'' 'பேட்ட' படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது என்பது நான் காணாத கனவு. இது நிஜமா என்று நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இது அவ்ளோ பெரிய விஷயம் எனக்கு.

ரஜினி சார், எதுக்கெடுத்தாலும் ஆண்டவன் ஆண்டவன்னு மேலே கையைக் காண்பிப்பார். ஸ்கிரிப்டுக்குள்ளே ரஜினி சார் வந்து அழகா உக்கார்ந்துக்கறார். அவ்ளோ முழு ஈடுபாட்டோட என்கரேஜ் பண்ணி நடிச்சுக் கொடுக்கறாரு. என்னைப் பொறுத்தவரை, அந்த ஆண்டவனே ரஜினி சாரோட டெடிகேஷனைப் பாத்து வந்து, ரசிச்சு கை தட்டிட்டுப் போவான்.

நேத்து வந்தவன் நான். எனக்கே சில சமயங்கள்ல இது போதும்னு நினைப்பு வருது. ஆனா இத்தனை படங்கள் பண்ணியும் கூட, இவ்ளோ உயரம் வந்த பிறகும் கூட, ஒவ்வொரு சீன்லயும் அத்தனை அட்டாச்மென்ட்டோட நடிக்கிறார் ரஜினி சார். இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.  ரஜினி சார் செய்றதெல்லாம் பெரிய ஒர்க்.

கார்த்திக் சுப்பராஜ், கமுக்கமான ஆளு. சைலன்ட்டாவே இருப்பாரு. ஆனா நிறைய்ய சர்ப்ரைஸ்களை உள்ளுக்குள்ளே வைச்சிருக்கறவர். ஏதோ ஸ்கூல் படிக்கிற பையன்னு முதல்ல பாக்கும் போது நினைச்சேன். அப்புறம் பணக்கார வீட்டுப் புள்ள போல… படம் எடுக்க வந்திருக்குன்னு நினைச்சேன். ஆனா அவரோட திறமையை பாத்து வியந்து போனேன்.

ரஜினி சாரோட இந்த 'பேட்ட' படம் எப்படின்னா, செமயா, சும்மா ஸ்டைலா, கெத்தா, ஒரு கலாய்யா,பேட்ட இருக்கும். படத்தோட கடைசி ஃப்ரேம்ல கூட சர்ப்ரைஸ் வைச்சுக்கிட்டே இருக்கார் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படியொரு அனுபவம் கிடைச்சதுக்கு நன்றி ரஜினி சார். கார்த்திக் சுப்பராஜுக்கும் நன்றி. சன் பிக்சர்ஸுக்கு நன்றி''.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in