

2.0 திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. இந்திய திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. 3 வருடத் தயாரிப்பு, கிராபிக்ஸில் தாமதம் என்று பல சோதனைகளைத் தாண்டி நவம்பர் 29-ம் தேதி வெளியானது. பலரும் கிராபிக்ஸ் பிரம்மாண்டம் என்று பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், "#2point0 இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை முழுவதுமாக ரசித்தேன். ரஜினிகாந்த் சாரின் ஸ்டைலும் மாஸும் சிறப்பு. ஷங்கர் மட்டும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள். ஏ.ஆர்.ரஹ்மான், லைகா நிறுவனத்துக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.