அமலாபாலுடன் திருமணமா? - விஷ்ணு விஷால் காட்டம்

அமலாபாலுடன் திருமணமா? - விஷ்ணு விஷால் காட்டம்
Updated on
1 min read

அமலாபாலுடன் திருமணம் என்று வெளியான செய்திக்கு விஷ்ணு விஷால் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளத்தில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து 'ராட்சசன்' படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் 21-ம் தேதி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in