

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் அஞ்சலியோடு த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜெயம் ரவி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க சுராஜ் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
சென்னையில் ஜெயம் ரவி, அஞ்சலி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் ஜெயம் ரவிக்கும் இரண்டு ஜோடிகள். அஞ்சலி போக இன்னொரு நாயகியும் இருக்கிறார். முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என படக்குழு அறிவித்தது.
தற்போது அந்நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே 'உனக்கும் எனக்கும்', 'பூலோகம்' ஆகிய படங்களில் ஜெயம் ரவி - த்ரிஷா இணைந்து நடித்திருக்கிறார்கள். ஹிட் ஜோடி என்பதால் நன்றாக இருக்கும் என ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குநர் சுராஜ்.
விரைவில் தொடங்கவிருக்கும் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.