

’2.0’ பாடல்கள் படமாக்கிய விதத்தைப் பார்த்து திகைத்துப் போனேன். ஷங்கர் ஷங்கர் தான் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
‘2.0’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ’உயிரே உயிரே என் பேட்டரியே’ பாடல் லிரிக்கல் வீடியோ ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:
இப்பாடலை கார்க்கி எழுதியிருக்கிறார். சித் ஸ்ரீராம், ஷாஷா பாடியிருக்கிறார்கள். இப்பாடலுக்காக ஷங்கர் எளிதில் காம்ப்ரமைஸ் ஆகவில்லை.
நான் 12 ட்யூன் 13 ட்யூன்கள் கொடுத்தேன். பின்னர் இந்த ட்யூன் அவருக்குப் பிடித்திருந்தது. இந்தப்பாடல் வீடியோவைப் பார்த்தபோது நான் திகைத்துப்போனேன். ஷங்கர் ஷங்கர்தான். இந்த ஸ்கோரை சாம்ப்ளர்ஸ் மூலம் கம்போஸ் பண்ணிவிட்டு. பின்னர், லண்டனில் 100 பேர் ஆர்கஸ்ட்ரா மும்பையில் 40 பேர் கோயர் அதன் பின்னர் சென்னையில் என மூன்று ஸ்டூடியோக்களில் உருவாக்கினோம்.
‘2.0’-வில் 4 பாடல்கள் உள்ளன. ஆரம்பத்தில் பேக்கிரவுன்ட் ஸ்கோர் மட்டுமே பாடல்களே இல்லை என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 4 பாடல்கள் ஆகிவிட்டன. இந்த ஒரு படத்துக்கு இசையமைத்தது 8 படங்களுக்கு இசையமைத்த அனுபவத்தைத் தந்தது. 3 ஆண்டுகள் உழைப்பு. இப்போதுகூட அண்மையில் இசையில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்