ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை 

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை 
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.0’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.0’ திரைப்படம் வரும் 29-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”ரஜினியை வைத்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளங்களில் வெளியிட்டால் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே 2.0 படத்தை இணையத்தில் வெளியிட 3,000 இணையதள சேவை நிறுவனங்கள் மற்றும் இணையதளங்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.0’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட 3,000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினியை வைத்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளங்களில் வெளியிட்டால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in