ரஜினியின் ‘பேட்ட’ அப்டேட்

ரஜினியின் ‘பேட்ட’ அப்டேட்
Updated on
1 min read

ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை, லடாக், ஐரோப்பா, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

கடந்த அக்டோபர் 19-ம் தேதியுடன் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது. இத்தனைக்கும் படக்குழு போட்ட ஷெட்யூல்படி நவம்பர் முதல் வாரத்தில்தான் படப்பிடிப்பு முடிய வேண்டுமாம். ஆனால், சொன்ன தேதியைவிட 15 நாட்கள் முன்கூட்டியே படப்பிடிப்பை முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.இந்நிலையில், ‘பேட்ட’ படத்தில் வைபவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், வைபவும் கூடுதலாக இணைந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் வைபவ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in