

சென்னையில் பிரபலமான படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி இடம் வாங்கியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது 'நான்' படத்தில் மூலமாக நாயகனாக வலம்வர ஆரம்பித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் 'சலீம்' இம்மாதம் வெளிவர உள்ளது. அதனைத் தொடர்ந்து 'இந்தியா-பாகிஸ்தான்' என்னும் படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலக நடிகர்களுக்கு பெரும் பரிச்சியமானது ஏ.வி.எம்.ஸ்டூடியோ. இந்த ஸ்டூடியோவிற்குள் ஏ.வி.எம் சரவணன் அலுவலகத்திற்கு அருகில் சுமார் முக்கால் கிரவுண்ட் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் சொந்தமாக ஒரு ரெக்காடிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.
ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு நெருக்கமான ஏ.வி.எம் நிறுவனத்தின் இடத்தினை அவர்களுக்கு முன்னால் விஜய் ஆண்டனி வாங்கியிருப்பதை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள்.