‘ஹாக்கி உலகக் கோப்பை 2018’: ப்ரமோஷன் பாடலில் ஷாருக் கான், நயன்தாரா

‘ஹாக்கி உலகக் கோப்பை 2018’: ப்ரமோஷன் பாடலில் ஷாருக் கான், நயன்தாரா
Updated on
1 min read

‘ஹாக்கி உலகக் கோப்பை 2018’ ப்ரமோஷன் பாடலில் ஷாருக் கான், நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர்.

2018-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெறும் இந்தப் போட்டியில், மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தப் போட்டிக்கான ப்ரமோஷன் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நம் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘ஜெய் ஹிந்த் இந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை, குல்ஸார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானே தயாரித்துள்ள இந்தப் பாடலின் ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஷாருக் கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்தியப் பாரம்பரியக் கலைகளும் இடம்பெற்றுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in